செப்டம்பர் 04, நுங்கம்பாக்கம் (Chennai News): மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்துள்ளது. சௌராஷ்டிரா கடலோரப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, ஒன்றாம் தேதி வாக்கில் வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இரண்டாம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து மூன்றாம் தேதி காலை சக்தி புயலாக மாறி குஜராத்தின் துவாரகாவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Gold Rate Today: போக்குக்காட்டும் தங்கம், வெள்ளி விலை.. காலை குறைந்து மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.!
இன்றைய வானிலை (Today Weather):
இதனால் செப்டம்பர் நான்காம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். நகரில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Cough Syrups Banned: 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை.. பெற்றோர்களே கவனம்.!
காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு, காலை 10 மணி வரையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.