Hosur Accident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்; தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்.. ஓசூரில் கோர விபத்து.!
10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 26, ஓசூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் உள்ள ஓசூர் (Hosur), பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூர் (Bangalore National Highway) தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இதனால் எப்போதும் பரபரப்பான இந்திய சாலைகளில் ஒன்றாக ஓசூர் - பெங்களூர் (Hosur Bangalore Road) சாலை இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை சுமார் 4 மணியளவில், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகர் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. K Armstrong: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முக்கிய குற்றவாளி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!
13 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து:
இந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முன்னால் சென்றுகொண்டு இருந்த சரக்கு லாரியின் மீது மோதியுள்ளது. இதனால் அந்த லாரி மற்றொரு லாரியின் மீது மோதி இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து என பின்னால் வந்துகொண்டு இருந்த வாகனங்களான கார்கள், பேருந்து, லாரி என மொத்தமாக 13 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. 5 கார்கள் அப்பளம் போல நொறுங்கிப்போயின. ஒருசில கார்களின் முன்பக்கம் மட்டும் சேதம் ஏற்பட்டு இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு தமிழ்நாடு அரசு பேருந்து என 13 வாகனங்கள் விபத்தில் சிக்கி இருந்தன. Annamalai on AIADMK: எடப்பாடியின் சர்ச்சை பேச்சு? "அதிமுக Vs பாஜக" பிரிவுக்கு காரணம் என்ன?.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை..!
ஒருவர் பலி., 10 பேர் படுகாயம்:
இந்த விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த கோவை ஆயில் மில் அதிபர் வெங்கடேஷ் (33), நண்பர் அரவிந்த் (30), தஞ்சாவூரை சேர்ந்த துரை (24), பழனியை சேர்ந்த கார்த்திக் ராஜா (24) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். வேறொரு காரில் பயணித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி (65), பூபேஷ், ஓட்டுநர் ரவி (55) ஆகியோரும் படுகாயமுற்றனர். மொத்தமாக 10 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் ரவி நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தின் பதறவைக்கும் காணொளி :