Tamilnadu Shocker: 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்; விடுதி அறையில் கொடுமை., அடுத்தடுத்து நெஞ்சுவலி நாடகம்?

மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் உடன்குடியை அதிரவைத்துள்ளது.

PET Teacher Ponsingh Alex | Principal Charles Sweety (Photo Credit: @Namo3Namo / @NewsTamil24x7 X)

நவம்பர் 12, திருச்செந்தூர் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், உடன்குடி (Udangudi) பகுதியில் சல்மா தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Salma Matriculation School) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள்.  இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக (PET Teacher Sexually Harassed 5 Girl Students) பொன் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த அக்.22, 2024 அன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு, பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5 மாணவிகளை அழைத்துக்கொண்டு பொன்சிங் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு விடுதியில் அறையெடுத்து அனைவரும் தங்கி இருந்தனர்.

மதுவை ஊற்றி அத்துமீறல்:

அப்போது, மாணவிகளுக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்த பொன்சிங், அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி அவர் அனுப்பி வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டிற்கு சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவிக்கவே, அவர்கள் பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. Instagram Love: கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம்பிடித்து பணம் பறித்த தந்தை - மகன்; இன்ஸ்ட்டா காதலால் பெருந்துயரம்.! 

Template: Sexual Harassment

உடற்கல்வி ஆசிரியர் கைது:

இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவே, தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்திய கல்வி அலுவலர், காவல் துறையினரிடம் புகார் அளித்ததைத்தொடர்ந்து, காவல்துறையினர் தலைமறைவான உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை கோயம்புத்தூரில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அவர் விசாரணைக்காக உடனடியாக திருச்செந்தூர் அழைத்து வரப்பட்டார்.

பள்ளியின் செயலர், முதல்வரும் போக்ஸோவில் கைது:

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல், உடற்கல்வி ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி, செயலர் சையத் அகமதுவும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, செயலரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

நெஞ்சுவலி நாடகம்?

இதனால் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அதேபோல, முதல்வர் சார்லசும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தெரிந்திருந்தும், 20 நாட்களாக காவல்துறையிடம் எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை. இதனாலேயே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து,  இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி தற்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

போக்ஸோ வழக்கில் கைதாகிய பள்ளியின் முதல்வர், செயலர் அடுத்தடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.