நவம்பர் 05, தூத்துக்குடி (Cinema News): தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜிபி முத்து (GP Muthu). இவர் டிக் டாக் செயலி மூலம் ரசிகர்களிடம் அடையாளம்பெற்று, யூடியூபராக இருந்து வந்தார். தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் நடிகராகவும் வலம்வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்தும் வருகிறார். டிக் டாக் செயலி மீதான தாக்கத்தால் இவரது வாழ்க்கை பல மாற்றங்களை சந்தித்தாலும், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் காரணமாக புகழ்பெற்ற நபராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை நான் தான் - ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
சாலையில் நடந்து சென்றபோது தகராறு:
இந்நிலையில், இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி. சம்பவத்தன்று ஜிபி முத்துவின் மகன்கள் சாலையை மறைத்தபடி நடந்து சென்றுள்ளனர். அப்போது, முத்து மகேஷ் என்பவர் ஜிபி முத்துவின் மகன்களை கண்டித்து இருக்கிறார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் உண்டாகிய நிலையில், ஜிபி முத்து மற்றும் அவரின் மனைவி, 2 உறவினர்கள் சேர்ந்து மகேஸ்வரியின் கணவரை தாக்க முற்பட்டுள்ளனர். அதனை மகேஸ்வரி தடுக்க முற்பட்டதால், அவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த விஷயம் குறித்து மகேஸ்வரி உடன்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஜிபி முத்து, அவரது மனைவி, 2 நபர்கள் என 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.