Tiruppur Shocker: "ஐயா காப்பாத்துங்க" கிணத்துக்குள் கேட்ட அலறல் சத்தம்., நள்ளிரவில் பதறவைத்த சம்பவம்.!
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், திருடன் கிணற்றுக்குள் சிக்கி துயரடைந்த சம்பவம் காங்கேயத்தில் நடந்துள்ளது.
நவம்பர் 03, காங்கேயம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் (Kangeyam) பகுதியில் வசித்து வரும் விவசாயி, நேற்று முந்தினம் இரவில் தனது வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் முற்றம் பகுதியில் உறங்கி இருக்கிறார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட விவசாயி, கதவை பார்த்தபோது திருடன் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைய முயற்சிப்பது தெரியவந்தது. இதனையடுத்து, திருடன்., திருடன் என விவசாயி சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.
கிணற்றுக்குள் அலறல் சத்தம்:
மக்களிடம் சிக்கினால் நொறுக்கியெடுத்துவிடுவார்கள் என பயந்துபோன திருடனோ, அங்கிருந்து இருட்டுக்குள் ஓடி மறைந்தார். திருடன் எங்காவது தப்பி சென்றிருப்பார் என பொதுமக்களும் வந்துவிட்டனர். பின் மறுநாள் காலையில் விவசாயி தோட்டக் கிணற்று பகுதிக்கு சென்றபோது, "ஐயா என்னை யாரவது காப்பாற்றுங்க" என அலறல் சத்தம் கேட்டுள்ளது. Chartered Accountant: ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிஏ தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
திருடன் மீட்பு & கைது:
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன விவசாயி கிணற்றுக்கு அருகே சென்று பார்த்தபோது, நேற்று இரவில் தப்பியோடிய திருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்தது அம்பலமானது. இதனையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் திருடனை மீட்டு காங்கேயம் காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்:
திருடன் கிணற்றுக்குள் விழுந்ததில் அவரின் கால்களில் லேசான எலும்பு முறிவு காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர். திருடனிடம் அதிகாரிகள் விசாரிக்கையில், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.