SSI Shanmugavel | Accuse Manikandan (Photo Credit: @mannar_mannan X / YouTube)

ஆகஸ்ட் 07, உடுமலைப்பேட்டை (Tiruppur News): திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 57), நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) கொலை செய்யப்பட்டார். கோவை மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் தென்னந்தோப்பில், கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த தந்தை - மகன்கள் மூர்த்தி, மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேரில் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் ஆயுதப்படை காவலர் அழகுராஜா ஆகியோர் சமாதானம் பேச முயற்சித்துள்ளனர். குடும்ப விஷயம் என்பதால் நீங்கள் தலையிட வேண்டாம் என எச்சரித்த கும்பல், கைது நடவடிக்கையில் ஈடுபட முற்பட்ட காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தலையைத் துண்டித்து வெட்டி சாய்த்தது. மேலும், காவலர் அழகுராஜாவின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் தப்பிச் சென்று காவல்துறையினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், நேரில் வந்த காவல்துறையினர் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை பிரேத பரிசோதிக்காக அனுப்பி வைத்தனர். Agaram Foundation: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.! 

SSI சண்முகவேல் கொலை (SSI Shanmugavel Murder Case):

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உடுமலைப்பேட்டைக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினார். உயிரிழந்த சண்முகவேலின் உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தி 30 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை நேரத்தில் இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மூர்த்தி மற்றும் தங்கபாண்டி காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டனை அதிகாரிகள் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை.. "சட்டம் ஒழுங்கு எங்கே?" - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.! 

Tiruppur SSI Murder Case (Photo Credit : Youtube)
Tiruppur SSI Murder Case (Photo Credit : Youtube)

SSI சண்முகவேல் கொலை வழக்கில் என்கவுண்டர் (Tiruppur SSI Murder Case Encounter):

இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான தந்தை மூர்த்தி, இளைய மகன் தங்கப்பாண்டி நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். அப்போது, அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த நிகழ்வின்போது அதிகாரிகளை தாக்கிவிட்டு மணிகண்டன் தப்பிச் செல்ல முற்பட்டார். பதில் தாக்குதல் நடவடிக்கையில் குற்றவாளி ஈடுபட்டதால், மணிகண்டன் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி மணிகண்டன் தாக்கியதில் காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதி :