Karur Van Crash: மழைநீர் தேங்கி சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த எமன்: நல்வாய்ப்பாக தப்பித்த 23 உயிர்கள்.. அதிகாரிகளின் அலட்சிப்பணியால் சோகம்.!

அடுத்த அசம்பாவிதத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

Karur Van Crash Visual (Photo Credit: @ANI X)

டிசம்பர் 23, கரூர் (Karur News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி (Nallampalli, Dharmapuri) பகுதியை சேர்ந்தவர்கள் 23 பேர், தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா (Tour) சென்றிருந்தனர். சுற்றுலாவை நிறைவு செய்தவர்கள், நேற்று இரவு மீண்டும் தர்மபுரி நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தனர்.

இவர்கள் வேனில் பயணித்த நிலையில், வேன் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் (Velayuthampalaiyam, Karur) பகுதியில், புகளூர் கரூர் - சேலம் தேசிய (Karur Salem National Highway) நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தது. அப்போது கனமழையும் பெய்து இருக்கிறது.

இந்நிலையில், வேலாயுதம்பாளையம் பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிய வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். iDMB Top Actors India 2023: இந்திய அளவில் சிறந்த நடிகர்கள் டாப் 10 பட்டியலை வெளியிட்டது ஐடிஎம்பி... நயன்தாரா & விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.! 

மேலும், சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையை சேர்ந்த அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கிய 23 பேரில் 2 குழந்தைகளும் இருந்தனர். அனைவரும் லேசான காயத்துடன் பாதிக்கப்பட்டதால், 6 அவசர ஊர்திகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும், பாலம் அருகில் கட்டுமான பணிகள் சரியாக மேற்கொள்ளாததே, மழை நேரங்களில் நீர் தேங்கி விபத்திற்கு முதற்காரணமாக அமைகிறது என உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.