Tamil Nadu 12th Board Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா?..!

08-05-2023 இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையத்தின் வழியே வெளியிடப்பட்டது.

HSC Results 2023

மே 08, சென்னை (12th Exam Result): தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து 8.51 இலட்சம் பேர் எழுதினர்.

தேர்வின் தொடக்கத்திலேயே சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வை எழுதவில்லை என்ற அறிவிப்புகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அவர்களில் முக்கால் பங்குக்கு மேல் உள்ள மாணவர்கள், இடையில் படிக்க வராமல் இருந்துவிட்ட நிலையில், அவர்களின் பெயரும் தவறுதலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. Women Officers at Line Of Control: இந்திய எல்லையில் பெண் இராணுவ அதிகாரிகள் பணியாற்ற ஒப்புதல்; பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடி.!

இந்த நிலையில், 08-05-2023 இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையத்தின் வழியே வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மேற்கூறிய இணையதளத்திற்கு சென்று பதிவிட்டு பெற்றுக்கொள்ளலாம். அரசின் சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் விரைந்து பள்ளிகள் வாயிலாக மாணவ-மாணவியர்களுக்கு விநியோகிக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் திட்டப்படி மாணவர்கள் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் பெற்றால் அது தேர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு எழுதிய 8 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களில் 5.36 இலட்சம் மாணவர்கள் அறிவியல் துறையையும், 2.54 இலட்சம் மாணவர்கள் வர்த்தக துறையையும், 14 ஆயிரம் மாணவர்கள் கலைத்துறையையும் தேர்வு செய்தவர்கள் ஆவார்கள்.

தேர்வு முடிவுகளை SMS வாயிலாக அறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு 94.03 ஆகும்.