முருக பக்தர்களே தயாரா?.. ஒரேநாளில் 6 கோவிலில் தரிசனம்; சிறப்பு சுற்றுலா பேருந்து அறிவிப்பு.! விபரம் உள்ளே.!

அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌, கும்பகோணம்‌ சார்பில்‌ 6 முருகன்‌ கோவில்களை ஒரே நாளில்‌ தரிசிக்கும்‌ வகையில்‌ வார இறுதி நாட்களான சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர்‌ 3வது வாரம்‌ முதல்‌ இயக்கப்படுகிறது.

முருக பக்தர்களே தயாரா?.. ஒரேநாளில் 6 கோவிலில் தரிசனம்; சிறப்பு சுற்றுலா பேருந்து அறிவிப்பு.! விபரம் உள்ளே.!
TN Govt Bus (Photo Credit: @sivasankar1ss X)

அக்டோபர் 02, கும்பகோணம் (Kumbakkonam News): அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌, கும்பகோணம்‌ சார்பில்‌ 6 முருகன்‌ கோவில்களை (Murugan Temple Visit) ஒரே நாளில்‌ தரிசிக்கும்‌ வகையில்‌ வார இறுதி நாட்களான சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ சிறப்பு சுற்றுலா (Special Tourist Bus Service by Tamilnadu Govt) பேருந்து 2024 அக்டோபர்‌ 3வது வாரம்‌ முதல்‌ இயக்க போக்குவரத்துக் கழக கும்பகோணம் கிளையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில்‌ துவங்கப்படவுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம்‌ (Spiritual Tourism Bus Operation) தொடர்பாக அறநிலையத்துறை மற்றும்‌ போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம்‌ நிர்வாக இயக்குநர்‌ இரா.பொன்முடி தலைமையில்‌ நடைபெற்றது. SETC TNSTC Gift: அரசுப்பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு; இது ஜம்போ ஜாக்பாட் தான்.. விபரம் உள்ளே.! 

6 கோவில்களின் விபரம்:

பயணிகள்‌ மற்றும்‌ பக்தர்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவிற்கிணங்கவும்‌, போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ வழிக்காட்டுதலின்படியும்‌ இச்சிறப்பு பேருந்து விரைவில்‌ இயக்கப்படவுள்ளது. சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில்‌ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்‌ (திருவாரூர்‌ மாவட்டம்‌), சிக்கல்‌ ஸ்ரீ சிங்காரவேலன்‌ ஆலயம்‌, பொரவச்சேரி கந்தசாமி திருக்கோவில்‌, எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்‌ (நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌), ஏரகரம்‌ ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோவில்‌, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்‌ ஆகிய ஆறு கோவில்களையும்‌ தரிசனம்‌ செய்வதற்கு ஏதுவாக ஆறுமுருகன்‌ திருத்தலம்‌ சுற்றுலா பேருந்து இயக்கப்படவுள்ளது.

தேவையான வசதிகளை செய்ய உத்தரவு:

அறநிலையத்துறை அலுவலர்கள்‌ சுற்றுலா பயணிகள்‌ சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக குடிநீர்வசதி, கழிவறை வசதி, முக்கிய பண்டிகை மற்றும்‌ விழா நாட்களில்‌ முன்னுரிமை அளித்து எந்தசிரமமும்‌ இன்றி தரிசனம்‌ செய்து திரும்பும்‌ வகையில்‌ தேவையான வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்‌ கொள்ளப்பட்டது. போக்குவரத்துத்துறை அலுவலர்கள்‌ பேருந்தை சிறப்பு முறையில்‌ பராமரித்து குறித்த நேரத்தில்‌ இயக்கி காலதாமதம்‌ இல்லாமல்‌ பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும்‌ ஏற்படுத்தி தர வேண்டும்‌. அறநிலையத்துறை அலுவலர்களுடன்‌ போக்குவரத்துத்துறை அலுவலர்கள்‌ ஒன்றிணைந்து தேவைப்படும்‌ வசதிகளை வழங்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்ளப்பட்டது. பயணம்‌ செய்யக்கூடிய பயணிகளின்‌ பெயர்‌, அலைபேசி எண்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான விபரங்கள்‌ குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க போக்குவரத்துத்துறை அலுவலர்கள்‌ நடவக்கை மேற்கொள்ள வேண்டும்‌. கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் TNSTC.IN இணையப்பக்கம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். அக்.3 வது வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் எந்த தேதி என பின்னர் அறிவிக்கப்படும். அந்த தேதிகளில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement