அக்டோபர் 26, கோலாலம்பூர் (World News): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா நாட்டுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றன. அதிபர் டொனால்ட் கிராம்பின் மலேஷிய பயணத்தின்போது, போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 47வது ஆசியன் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
அமெரிக்க அதிபர் பேச்சு:
இந்த நிகழ்ச்சியில் அமைதி ஒப்பந்தத்துக்குப்பின் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "கம்போடியா - தாய்லாந்து இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். தென்கிழக்கு ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் இது முக்கியமான நாள். மோதல் தொடர்பான செய்தி கிடைத்ததும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கு உறுதுணையாக இருந்த மலேசியா, தாய்லாந்து, கம்போடியா அதிபர்களுக்கு நன்றி. இந்த அமைதி ஒப்பந்தத்துடன் பொருளாதார நடவடிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளது. சுதந்திர நாடுகள் செழித்து வளர அமெரிக்கா துணை நிற்கும்" என பேசினார்.