Madurai Rains: தொடர் மழை, பலத்த காற்று எதிரொலி.. கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலி.!
தொடர் மழை எதிரொலியாக கட்டிடம் இடிந்து விழுந்ததால் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக பலியாகின.
மே 12, அலங்காநல்லூர் (Madurai News): மதுரை மாவட்டத்தில் (Madurai Rains) கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவில் திடீரென சூறாவளி காற்றோடு பலத்த மழையும் பெய்தது. 2 மணிநேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்தது.
இதனால் அங்குள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இருந்த மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சில சேதமடைந்தன. இதனால் 10 மணிநேரத்திற்கு மேலாக தொடர் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டது. அலங்காநல்லூர் செல்லக்கவுண்டன்பட்டி பகுதியில் வெடிக்கோனான் என்பவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் இருந்தது. MS Dhoni Sanju Samson: இளம் தோனியாக சஞ்சு சாம்சன்; பாராட்டு மழையில் நனையும் சஞ்சு.. சொன்னது யார் தெரியுமா?.. கொண்டாடும் ரசிகர்கள்.!
கோழிப்பண்ணை கட்டிடம் ஓடு என்பதால், அது காற்றின் வேகத்தில் தாங்க முடியாமல் தரைமட்டமாகின. இதனால் அங்கிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்த. இந்த விஷயம் தொடர்பாக அலங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.