Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

அக்டோபர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் தொடங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. #Breaking: தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கொட்டித்தீர்த்த கனமழையால் அறிவிப்பு.! 

காலை 10 மணிவரை கனமழை:

இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அதே நேரத்தில், இன்றைய நாளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழகம் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்: