Dengue Fever: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: டெங்கு காய்ச்சல்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ அதிகரிப்பு.!

மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் ஆண்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

File Image: Mosquitos

நவம்பர் 08, தலைமை செயலகம் (Chennai News): வடகிழக்கு பருவமழைக்‌ காலத்தில்‌, அடிக்கடி பரவும்‌ நோய்கள்‌, குறிப்பாக டெங்கு, வீடு மற்றும்‌ சுற்றுப்புற பகுதிகளில்‌ தவிர்க்க முடியாத நீர்‌ தேக்கத்தின்‌ காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில்‌, டெங்கு பாதிப்பு நவம்பர்‌ மற்றும்‌ டிசம்பர்‌ மாதங்களில்‌ அதிகரிக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை பெய்து வரும்‌ நிலையில்‌, தமிழ்நாடு முழுவதும்‌ ஆங்காங்கே காய்ச்சல்‌ மற்றும்‌ டெங்கு பாதிப்புகள்‌ அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும்‌ விதத்தில்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலத்துறையினர்‌ டெங்கு காய்ச்சல்‌ பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்‌. Arokya Milk: ஆரோக்கியா பால் & தயிர் விலை இன்று முதல் உயர்வு; அதிரடியாக அமல்.!

இறப்புகளை குறைக்க நடவடிக்கை:

ஜனவரி 2024 முதல்‌ நவம்பர்‌ 5 வரை, தமிழ்நாட்டில்‌ 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட நபர்கள்‌ குணமடைந்துள்ளனர்‌. 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில்‌ செங்கல்பட்டு மாவட்டத்தைச்‌ சேர்ந்த சிறுமியின்‌ மரணமும்‌ அடங்கும்‌. டெங்கு பரவுவதைத்‌ தடுக்கவும்‌, டெங்கு தொடர்பான இறப்புகளை மேலும்‌ குறைக்கவும்‌ தகுந்த நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன.

காய்ச்சல்‌ சிகிச்சை மையங்கள்‌:

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்‌ 24 மணி நேரமும்‌ செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநோயாளிகளுக்கு நிலவேம்பு கஷாயம்‌ வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனைகள்‌, மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகள்‌ மற்றும்‌ தாலுகா மருத்துவமனைகளில்‌ காய்ச்சல்‌ பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ டெங்கு பரிசோதனை மையங்கள்‌ உயர்த்தப்பட்டுள்ளன. காதாரத்துறை சார்பில் தீவிர கொசு கட்டுப்பாடு, புகை தெளித்தல்‌, கொசு புழு கட்டுப்பாடு, கொசு அடர்த்தி கண்காணிப்பு மற்றும்‌ வைரஸ்‌ ஆன்டிஜெனைக்‌ கண்டறிய கொசு பகுப்பாய்வு ஆகியவை மாவட்டங்கள்‌ முழுவதும்‌ தொடர்ந்து நடத்தப்படுகின்றன.