நவம்பர் 08, சென்னை (Chennai News): தனியார் பால் & பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவமான ஆரோக்கியா, தமிழ்நாடு முழுவதும் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பால் & தயிர் பொருட்களின் விலை தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது
பால் விலை (Arokya Milk Price):
அதன்படி, நிறைகொழுப்பு 500 மி.லி பால் ரூ.36ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் பால் ரூ.65ல் இருந்து ரூ.67 ஆக உயர்த்தப்படுகிறது. நிலைப்படுத்தப்ட்ட பால் 500 மி.லி ரூ.31ல் இருந்து ரூ.32 ஆகவும், 1 லிட்டர் பால் ரூ.58ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்த்தி அறிவிக்கப்ட்டுள்ளது. Family Dies in Accident: தாய்-தந்தை, மகன் என மூவர் விபத்தில் மரணம்; கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்.!
தயிர் விலை (Arokya Curd Price Today):
அதேநேரத்தில், தயிர் 500 கிராமின் விலை ரூ.37 ல் இருந்து ரூ.38 ஆகவும், கிலோ அளவிலான தயிர் விலை ரூ.66ல் இருந்து ரூ.68 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. விலை உயர்த்தப்பட்டால் பால் முகவர்கள் கமிஷன் தொகையில் மாற்றம் இல்லாததால், முகவர்கள் சங்கம் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது ஆரோக்கியா பால் விநியோகம் செய்து வரும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.