Noyyal River Kovai:கோவை நொய்யல் ஆற்றை பராமரிக்க புதிய திட்டம்.!: நடந்தாய் வாழி காவிரி.!
காவிரியின் உபநதியான நொய்யல் ஆற்றில், கழிவுநீர் கலப்படமாவதை தடுக்க, “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டத்தை தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான ஆய்வு கூட்டம் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்டோபர் 06, கோவை (TamilNadu News): கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்துவதற்காக “நடந்தாய் வாழி காவிரி” என்ற புதிய திட்டத்தை தேசிய நதி நீர் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்த இருக்கிறது. நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தொடங்கி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 158 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் 62.21 கிலோமீட்டர் தூரம் ஓடும் நொய்யல் ஆற்றின் குறுக்கில் 17 அணைக்கட்டுகள் மற்றும் 25 குளங்கள் அமைந்திருக்கிறது. மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் அதிகமாக கலந்து அசுத்தம் அடைந்து இருக்கிறது. Walking in pebble stones: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தான்.! கூழாங்கற்களில் இப்படி நடந்தால் போதும்.! ஆரோக்கியம் உங்கள் வசம்.!
தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைச்சகம் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து, அவற்றை தடுக்க திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி இரண்டு நாட்கள், நொய்யல் ஆற்றின் ஆரம்ப பகுதியிலிருந்து தொடங்கி, இருகூர் அணைக்கட்டு வரையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து,நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், கோவை மண்டல தலைமை பொறியாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்த “நடந்தாய் வாழி காவிரி” திட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)