Erode By Poll PanneerSelvam Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்.. பாஜகவின் ஆதரவு யாருக்கு?..!
இரண்டு அணிகளாக உடைந்துள்ள அதிமுக சார்பில், இரண்டு பேருமே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றனர். இதனால் அத்தேர்தல்களம் சரமாரியாக சூடேறி, அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதை நோக்கிய பார்வையை பெற்றுள்ளது.
பிப்ரவரி 02: காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் (Thirumagan E.V.Ra, Congress Party) மறைவைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு (Erode East By Poll) தொகுதியில் பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. 7 ம் தேதி வரையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்பதால், பலரும் தங்களின் வேட்புமனுவை பதிவு செய்கின்றனர்.
திமுக சார்பில் (DMK Alliance) அதன் கூட்டணியாக காங்கிரஸுக்கே (Congress) மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக (DMDK Party) சார்பில் அம்மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், அமமுக (AMMK Party) சார்பில் சிவ பிரசாந்த், நா.த.க (NTK Party) சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் (AIADMK Party) தென்னரசு போட்டியிடுகிறார். Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கட்சியின் அதிகாரங்களுக்காக போட்டியிட்டு வருவதால், ஓ.பன்னீர் செல்வம் (O. PanneerSelvam) தலைமையிலான அதிமுக என அவர்களின் சார்பில் செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், வேட்பாளரை வாபஸ் பெற ஒரேயொரு வழி இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளர் செந்தில் முருகன் களமிறக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் தார்மீக ஆதரவு வழங்குவோம் என கூறினோம். நான் - எங்களது தலைமை கழக நிர்வாகிகளோடு பாஜக (BJP) அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) & நிர்வாகிகளை சந்தித்தோம்.
அவர்களிடையே எங்களின் ஆதரவை கேட்டோம். பாஜக வேட்பாளரை களமிறக்கினால் நாங்கள் ஆதரவு தருவதாகவும் உறுதி அளித்தோம். பாஜக ஒருவேளை தனது சார்பில் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் எங்களின் வேட்பாளரை உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்வோம்" என பேசினார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 08:15 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)