SETC TNSTC Gift: அரசுப்பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு; இது ஜம்போ ஜாக்பாட் தான்.. விபரம் உள்ளே.!

அந்த வகையில், கடந்த மாதத்தில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை பெறவுள்ளனர்.

SETC Bus (Photo Credit: @ArasuBus X)

அக்டோபர் 02, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ பேருந்துகளில்‌, ஆன்லைன்‌ முன்பதிவு திட்டத்தில்‌, வார விடுமுறை நாட்கள்‌ மற்றும்‌ பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில்‌ பயணம்‌ மேற்கொள்வதை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, செப்டம்பர்‌-2024 மாதத்திற்கான குலுக்கல்‌ முறையில்‌ பதிமூன்று (13) பயணிகளை மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ (சென்னை) மற்றும்‌ பல்லவன்‌ போக்குவரத்து அறிவுரைப்‌ பணிக்குழு மேலாண்‌ இயக்குநர்‌ ஆல்பி ஜான்‌ வர்கீஸ்‌ கணினி குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்தார்‌.

டிஎன்எஸ்டிசி இணையம் / செயலியில் முன்பதிவு செய்யுங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ தொலை தூர பேருந்துகளில்‌, பொதுமக்கள்‌ எவ்வித சிரமுமின்றி பயணம்‌ செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ வலைதளமான TNSTC.IN அல்லது டிஎன்எஸ்டிசி (TNSTC) செயலி, மூலம்‌ பயணச்‌ சீட்டு முன்பதிவு செய்யும்‌ முறை செயல்பட்டு வருகின்றது. Scam on PM House Scheme: ஒரே பெயரில் 4 பிரதமர் வீடுகள்; பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி.. இலஞ்ச ஒழிப்புத்துறை வீடுவீடாக ஆய்வு.! 

குழுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பு:

வார விடுமுறை நாட்கள்‌ மற்றும்‌ பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில்‌ முன்பதிவு செய்து பயணிகள்‌ எளிதாக பயணம்‌ மேற்கொள்வதை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, ஒவ்வொரு மாதத்திலும்‌ வார விடுமுறை மற்றும்‌ பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில்‌ பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும்‌ பயணிகளில்‌ மூன்று பயணிகள்‌ கணினி மூலம்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும்‌ திட்டம்‌ ஜனவரி-2024 முதல்‌ தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

13 பயணிகள் தேர்வு:

இத்திட்டத்தின்‌ மூலம்‌ அதிக எண்ணிக்கையிலான பயணிகள்‌ பயனடைய வேண்டும்‌ என்ற நோக்கில்‌, ஜுன்‌-2024 முதல்‌ 13 பயணிகளை கணினி மூலம்‌ குலுக்கல்‌ முறையில்‌ தேர்வு செய்து, முதல்‌ மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- மும்‌, இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நடைமுறைபடுத்தும்‌ வகையில்‌, செப்டம்பர் 2024 மாதத்திற்கான பதிமூன்று வெற்றியாளர்களை கணினி குலுக்கல்‌ முறையில்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ (சென்னை) மற்றும்‌ பல்லவன்‌ போக்குவரத்து அறிவுரைப்‌ பணிக்குழு மேலாண்‌ இயக்குநர்‌ ஆல்பி ஜான்‌ வர்கீஸ்‌ நேற்று தேர்வு செய்தார்‌.

அதன்‌ விவரங்கள்‌ கீழ்வருமாறு:

1) திருமதி. அஞ்சு ரூ.10,000/-

2) திரு. ரகுராமன்‌ ரூ.10,000/-

3) திரு.வினோத்‌ ஆனந்தன்‌ ரூ.10,000/-

4) திருமதி.என்‌.ஆர்த்தி ரூ.2,000/-

5) திரு.சேக்‌ அர்சத்‌ ரகுமான்‌ ரூ.2,000/-

6) திருமதி.மனு ரூ.2,000/-

7) திருமதி.மேனகா ரூ.2,000/-

8) திரு.எஸ்‌.மதன்‌ ரூ.2,000/-

9) திருமதி.ஷாலினி ரூ.2,000/-

10) திரு.ஜி.சரவணன்‌ ரூ.2,000/-

11) திரு.சபரிசஜீவ்‌ ரூ.2,000/-

12) திருமதி.எஸ்‌.ஜெயவாணி ரூ.2,000/-

செப்டம்பர்‌-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு பரிசுகள்‌ விரைவில்‌ வழங்கப்படும்‌ என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.