Omni Bus Strike: ஆயுத பூஜைக்கு ஊருக்குச்சென்ற மகளுக்கு அதிர்ச்சி செய்தி; தனியார் ஆம்னி பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு.!

தொடர் விடுமுறைக்காக ஊருக்கு சென்றார், பணியிடங்களுக்கு திரும்ப எதுவாக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் சென்னை நோக்கி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Omni Bus Stand Chennai (Photo Credit: YouTube)

அக்டோபர் 24, சென்னை (Chennai News): ஆயுத பூஜை மற்றும் தொடர் வார இறுதி விடுமுறையையொட்டி, தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த நபர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

இவர்கள் விடுமுறை முடிந்து அடுத்தடுத்து மீண்டும் தங்களின் பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். தலைநகர் சென்னையில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை திரும்பவுள்ளனர்.

இதற்காக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்து சேவையும் சென்னை திரும்ப உதவி செய்கின்றன. அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு அதிகம் ஆகும். Hangzhou 2022: பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் தங்கம், வெள்ளி... குவியும் பதக்கங்கள், தொடரும் வெற்றிகள்.! 

இருப்பினும், மக்கள் சொகுசு பயணத்தை விரும்பி தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் நிலையில், சமீபத்தில் 120 ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூல் செய்ததாக புகாருக்கு உள்ளாகி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தற்போது இன்று மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணி முதல் தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்துகளை விடுவித்தால் மட்டுமே போராட்டம் நிறுத்தப்படும் என தெரிவிப்பட்டுள்ளதால், சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்த 1 இலட்சம் பயணிகளின் நிலை என்ன? என்ற கேள்விக்கு எழுந்துள்ளது.