அக்டோபர் 24, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ (Hangzhou 2022) நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் 28 தங்கப் பதக்கம் உட்பட 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது ஹாங்சோ விளையாட்டு மைதானத்தில் ஆசிய பாரா (Asian Para Games) விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. வருகிறது. 4000-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில், 22 வகை விளையாட்டுக்கள், 616 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. Money Stolen From Parked Car: பட்டப்பகலில் துணிகரம்.. காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 இலட்சம் திருட்டு.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
இந்நிலையில், பாரா ஆசிய (Asian Para Games) விளையாட்டுகள் போட்டியில், சிறிய அளவிலான படகு செலுத்தும் (Para Canoe) விளையாட்டு பிரிவில், இந்திய வீராங்கனை பாராச்சி (Parchi Yadav) தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 54.962 புள்ளிகளை பெற்று அவர் இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.
அதேபோல, பாரா தடகளப் (Para Athlete) போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா (Simran Sharma) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் யாகுனுடன் நடந்த போட்டியில், 12.68 வினாடிகள் வீதம் 100 மீட்டர் தூரத்தை கடந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தற்போது வரை இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்றுள்ளது.
SIMRAN WINS SILVER IN WOMENS 100M T12
Simran Sharma wins first medal of the day in para athletics as she finished ahead of 🇨🇳Shen Yaqin with time of 12.68 secs in Women's 100m-T12 final event to bag credible 🥈 at the event#AsianParaGames2022 pic.twitter.com/NR6qHUvy0u
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 24, 2023
First GOLD of Day 2 at #AsianParaGames! 🥇
Our #TOPScheme athlete @ItzPrachi_ strikes Gold for India in Para Canoe, Women's KL2, with an impressive clocking of 54.962.
This marks her second medal at the #AsianParaGames2022 🏆🚣🏻♀️
Congratulations Prachi on this remarkable… pic.twitter.com/i2ZIKRq2Pn
— SAI Media (@Media_SAI) October 24, 2023