Funds for Renovation: சர்வதேச தரத்திற்கு உயரப்போகும் கன்னியாகுமரி ரயில் நிலையம் : 49.36 கோடி நிதி ஒதுக்கீடு.!
இந்நிலையில் கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 7, கன்னியாகுமரி (Tamilnadu News): கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், “தினந்தோறும், உலக சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மக்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். அதனால் கன்னியாகுமரிக்கு தினசரி மற்றும் வாராந்திர ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது.
கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் மேற்கு கோபுர தோற்றத்தில் கன்னியாகுமரி ரயில் நிலையம் கட்டமைக்கப்படும். மேலும் கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை சகல வசதிகளுடன் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டது. Loan Option in UPI: இனி செலவு பற்றிய கவலை வேண்டாம்- யூபிஐ மட்டும் இருந்தால் போதும்: ஆர்பிஐ- இன் அட்டகாசமான அறிவிப்பு.!
மண் பரிசோதனை முடிவுகள் வெளியாகி ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. அனைத்து விதமான மேம்பாட்டு பணிகளும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் (Vijay Vasanth), திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் நாகர்கோயில் சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் அனைத்தையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.