Railway Constable Sexual Harassment Case (Photo Credit: @iamharunkhan X)

ஆகஸ்ட் 25, டெல்லி (Delhi News): ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்துழைப்புடன் தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்காக போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் பயணம் செய்த விரைவு ரயில் ஒன்றில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முன்பதிவு இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலரான ஆஷிஷ் குப்தா வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.! 

பணியிடைநீக்கம்:

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி கூச்சலிட்டதை தொடர்ந்து, ஆஷிஷ் குப்தா மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது போல ரயில்வே காவலர் செய்த இந்த செயல் கண்டனங்களை குவித்து வருகிறது. மேலும் ரயில் பயணத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து ஆஷிஷ் குப்தா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் பயணத்தின் போது பாலியல் தொல்லை உட்பட பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினரை அழைக்க முற்பட்டால் 198 என்ற அவசரவை அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்.

பெண்ணிடம் காவலர் மன்றாடும் காட்சி:

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3