TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..!

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாதம் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் முதல் எண்ணற்ற நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முழு விபரத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.

TN Budget 2023 - 2024 Session Poster (Photo Credit: TNDIPR Twitter)

 

மார்ச் 20, தமிழ்நாடு சட்டப்பேரவை (Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் (TN Budget Session) இன்று பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கி நடைபெறவுள்ளது. இன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiaga Rajan), 2023 - 2024ம் ஆண்ட்டுக்கான இ-பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது.

இந்த பட்ஜெட் தாக்கலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தவைகள் பின்வருமாறு,

"தமிழ்நாடு மக்களின் வாழ்வியலை இரு கண்களாக கருதி, முதல்வரின் தலைமை பணப்பை எடுத்துக்கூறும், திருக்குறளை தெரிவித்து 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை தொடங்குகிறேன். மக்களை பேணிக்காப்பதே நமது அரசின் கடமை. கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் சமூக நீதியை உறுதி செய்ய தொலைநோக்கு பார்வை கண்ட திராவிட மாடல் ஆட்சி முறை, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் காண்பித்த வழியில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அன்றும், இன்றும், என்றும் எங்களுக்கு வழிகாட்டும் முண்டோக்களுக்கு வணக்கமும், மரியாதையும் தெரிவிக்கிறேன்.

சமூக நீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு 4 அடிப்படை தத்துவங்களை கொண்டு நாட்டிற்கே கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை உயர்த்திடுதல், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்தல், கல்வியின் மூலம் பெண்களின் வாழ்வு மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமை ஒழிப்பு, தரவுகளின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றுசேருவதை உறுதி செய்தல், சுற்றுசூழல் நீடித்த நிலைத்தன்மை, தலைமுறைக்கு இடையேயான சமத்துவத்தை உறுதி செய்வது போன்ற பல விஷயங்களில் கடந்த 2 ஆண்டுகளில் குறிப்பிட்டக்குத்தந்த வெற்றியை கண்டுள்ளோம்.

வருவாய் பற்றாக்குறை: சாதனைகளை கொண்டாடும் வேலையில் வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைன் போர், உலக பொருளாதார, நிதிச்சந்தையின் நிச்சயமற்ற சூழலையும் நாம் எதிர்கொண்டுள்ளோம். தேசிய அளவில் கடந்த ஆண்டில் மாநிலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி என்ற நிலையை அடைந்துள்ளோம். அதேபோல வருவாய் நிதி பற்றாக்குறையை நாம் கணிசமாக குறைத்துள்ளோம். ரூ.62 ஆயிரம் கோடி அளவில் இருந்த வருவாய் பற்றாக்குறையை, ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை என்பது வரும் ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் மாநில அரசின் வரி வருவாய் 6.11 % ஆக உயர்ந்துள்ளது. Japanese PM in India: இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா; டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் உற்சாக வரவேற்பு.! 

சோழர்களுக்கு அருங்காட்சியகம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அரசின் சார்பில் அமைக்கப்படும். சங்கம கலைவிழா 6 முக்கிய நகரங்களில் நடக்கும் அளவு விரிவுபடுத்தப்படும். அம்பேத்கரின் படைப்புக்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி, தமிழ் மொழியில் மென்பொருட்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும். தமிழ் அறிஞர்கள் 591 பேருக்கு இலவச பயணத்திட்டம் அமைப்படுத்தப்படும். தஞ்சாவூரில் அரசின் சார்பில் சோழர்களுக்கு என அருங்காட்சியகம் அமைக்கப்படும். சோழப்பேரரசின் கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படும்.

குடிமைத்தேர்வுகள் நிதிஉதவி: தமிழக இராணுவ வீரர்கள் இந்தியாவிற்கு உயிர்த்தியாகம் செய்திடும் நிலையில் ரூ.40 இலட்சம் கருணைத்தொகை நிதி அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும். இலங்கை தமிழர்களின் நலனுக்கு, அவர்களுக்கு கட்டிடம்கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குடிமைப்பணி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதன்மை தேர்வு எழுதினால் ரூ.25 ஆயிரமும், முதல்நிலை தேர்வு எழுதினால் ரூ.7,500 மாதம் வழங்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,000 கோடி: ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தின் மூலமாக புதிய பள்ளி கட்டிடங்கள் அமைக்கப்படும். அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறை, ஆய்வகம் கட்டுவதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தலைநகர் சென்னையில் சர்வதேச தரம் கொண்ட உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும். மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறைக்கு என ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையில் கீழ் இனி கொண்டு வரப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கலைஞர் நூலகம்: மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலமாக ஜூன் மாதம் திறக்கப்படும். தொழிலாளர் பயிற்சி தரும் நான் முதல்வன் திட்டத்திற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 12.70 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை பெற வழிவகை செய்யப்பட்டு தடைகள் & தாமதம் இன்றி உதவித்தொகை பெற வழிவகை செய்யப்படும். 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.2,800 கோடி செலவில் மேம்படுத்தப்படும். புலம்பெயர் தொழிலாளர்களும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் நலனுக்கு நிதி: ரூ.25 கோடி செலவில் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைப்பு செய்யப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மதுர, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் புதிய விடுதிகள் அமைக்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல்வரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இதனால் 18 இலட்சம் மாணவர்கள் பலன்பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்காக மொத்தமாக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்களுக்கான சேவைகளை பெற 39 உரிமை மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கான நிதிஉதவி: பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்குவதற்கு ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் சிறுபான்மை மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.1,580 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் மூலமாக கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 29 % அதிகரித்துள்ளது. உயர்கல்வித்துறைக்கு என ரூ.6,957 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமாக ரூ.24,212 கோடி கடந்த ஆண்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி: விவசாய கடன் தள்ளுபடிக்காக ரூ.2391 கோடி, நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி, சுஉதவி கடன் தள்ளுபடிக்காக ரூ.600 என கடன் தள்ளுபடிக்காக மொத்தமாக ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.434 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை நிறைவடையும் நிலையில் உள்ளன. தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ.10 கோடி செலவில் இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டின் 15 வது சரணாலயமாக அமைக்கப்படும்.

தந்தை பெரியார் சரணாலயம்: கடலில் ஏற்படும் அரிப்பை தடுக்க நெய்தல் மேம்பாட்டு திட்டம் மூலமாக ரூ.2,000 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். இதுகுறித்த பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவு பெறும். பறவை பாதுகாப்பு & ஆராய்ச்சிக்காக மரக்காணத்தில் ரூ.25 கோடி பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். ஈரோடு அந்தியூர், கோபிச்செட்டிபாளையத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் வனத்தில் தந்தை பெரியார் சரணாலயம் அமைக்கப்படும். முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 5,145 கி.மீ சாலைகள் அமைக்கப்படும். அம்ரூத் 3.0 திட்டத்தில் குடிநீர் சீரமைப்பு, நீர்நிலை புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அம்ரூத் திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.9,378 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மதுரை, கோவையில் மெட்ரோ: கோவையில் 2 கட்டிடமாக செம்மொழி பூங்கா ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான 2ம் கட்ட பணிகளுக்கு ரூ.7,145 கோடி தொகையில் செய்லபடுத்த, பன்னாட்டு நிதி பெற முன்மொழிவு செய்யப்படும். சென்னை மாநகரில் தனியார் பங்களிப்போடு கழிவறை கட்ட, மேம்படுத்த ரூ.430 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கழிவறை சீரமைப்பு திட்டம் பிற மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்படும். ரூ.1,000 கோடி செலவில் அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்படும். சென்னையை போல மதுரை, கோவை மாநகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை திட்டம் செயல்படுத்தப்படும்.

பேருந்து பணிமனைகள்: சென்னையில் உள்ள தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் பொழுதுபோக்கு சதுக்கம், திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படும். சென்னை மழை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடசேனனி வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை முதல் குமரி வரை தொழிற்வள சாலைக்கு என ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை வடடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மின்  உற்பத்தி அதிகரிப்பு: 500 பழைய பேருந்துகளை சீரமைக்கவும், 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரயில் போக்குவரத்து பங்களிப்பை அதிகரிக்க, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி டிட்கோ மூலமாக ரூ.8,056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய இரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கோவை மாநகரத்தில் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்க ரூ.9 கோடி ஒதுக்கப்படுகிறது. மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தியை 2030 க்குள் 33 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பசுமை மின்னாற்ற உற்பத்தியை 50 % அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.! 

ஜவுளி பூங்கா: மின்வாரியத்தின் இழப்பு 2021 - 22 ல் ரூ.11,951 கோடியில் இருந்து ரூ.7,822 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2030 க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி பங்களிப்பு நிறுவனம் உருவாக்கம் செய்யப்படும். சேலத்தில் ரூ.680 கோடி செலவில் 119 ஏக்கர் பரப்பில் ஜவுளி பூங்கா மத்திய அரசு உதவியோடு அமைக்கப்படும். புதிய ஜவுளி பூங்காவால் 2 இலட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிறு, குறு, நடுத்தர நிறுவங்களை கணக்கெடுக்க ரூ.5 கோடி செலவில் கணக்கீடு பணிகள் நடைபெறும். கைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். 2030 க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாடு பொருளாதாரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் நுட்ப பூங்கா: பசுமை மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையான 49 % மின்சார வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 2 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும். வேலூர், விருதுநகர், கள்ளக்குறிச்சியில் ரூ.410 கோடி செலவில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் இருக்கும் மாநகராட்சி சென்னை, தாம்பரம், ஆவை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட பல நகரங்களில் பொதுவெளியில் இலவச வை-பை சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு, நெல்லை, ஈரோட்டில் 1 இலட்சம் சதுர அடி பரப்பில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

தர்கா, தேவாலயம் சீரமைப்பு: ரூ.5,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதிய எத்தனால் உற்பத்தி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாகூர் தர்காவை சீரமைப்பதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம் மற்றும் மதுரையில் உள்ள தேவாலயத்தை ரூ.10 கோடி செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ஓசூர், கோவை நகரங்களில் டெக் சிட்டி அமைக்கப்படும். நடப்பாண்டில் 574 கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 400 கோவிகளில் குடமுழுக்கு நடைபெறும். திருத்தணி முருகன், பழனி முருகன், சமயபுரம் மாரியம்மன் கோவில் ரூ.480 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

அரசு பணியாளர்கள் வீட்டுக்கடன்: நிலம் தொடர்பான நிர்வாகத்தில் நில பதிவேற்று முறைகளை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது ஆட்சியில் 13,491 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கடன் ரூ.50 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண்கள் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 38 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.5,141 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 செப்டம்பர் மாதம்  15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் இருந்து அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்."

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement