MK Stalin: "கம்பேக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி" - அரசு நிகழ்ச்சியில் முதல்வர் புகழாரம்.!
பல பிரச்சனைகளை கடந்து கோவை மக்களுக்கு தொண்டாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
நவம்பர் 06, அனுப்பர்பாளையம் (Coimbatore News): கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின், இன்று அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமையவுள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 8 தளத்துடன் 1.98 இலட்சம் சதுர பரப்பில் அமையும் நூலகம், மிகப்பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (MK Stalin), அரசின் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். Serial Rapist: சிவகங்கையை அதிரவைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.. மாவுக்கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை.. எண்ட் கார்ட் போட்ட போலீஸ்.!
கம்பேக் கொடுத்துள்ள அமைச்சர்:
"அரசு & பொதுநிகழ்ச்சிகளில் மாணவர்களை பார்க்கும்போது புதிய உத்வேகம் ஏற்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு அரசுத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் (Senthil Balaji Comeback) கொடுத்துள்ளார். அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளை உடைத்து மீண்டு வந்துள்ளார், தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவார். அது உறுதி. கலைஞரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக மதுரையில் நூலகம் அமைத்தோம். அதனை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள்.
பெரியார் பெயரில் நூலகம் & அறிவியல் மையம்:
மதுரையை போல கோவையிலும் கலைஞரின் பெயரில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பின் வந்த ஆலோசனையில் நூலகத்துடன் அறிவியல் மையத்தையும் அமைக்க வேண்டும் என பேச்சுக்கள் வந்தது. இதனால் கோவையில் கலைஞர், அண்ணா பெயரை உருவாக்கிய, தொண்டு செய்து பழுத்த பழமான பெரியாரின் பெயரில் நூலகம் & அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என எண்ணம் எழுந்தது. இன்று அது தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா 2026 ஜனவரியில் நடைபெறும். திமுக அரசு சொன்னதை செய்யும். தெற்கு தான் வடக்குக்கு வாரி வழங்குகிறது." என பேசினார்.
நூலகம் & அறிவியல் மையம் அடிக்கல் நாட்டும் விழா நேரலை: