Tamil Pudhalvan Scheme 2024: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக மாதம் ரூ.1000/-... ரூ.401 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டதைப்போல தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் புதல்வன்' திட்டம் வாயிலாக 3.8 இலட்சம் மாணவர்கள் பலன் அடையவுள்ளனர்.

TN Govt Logo (Photo Credit: Wikipedia)

ஜூலை 25, சென்னை (Chennai): தமிழ்நாடு மாநில அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் (Moovalur Ramamirtham Ammaiyar Pudhumai Penn Scheme) மாதாந்திர செலவு மற்றும் குறைந்தபட்ச ஆதார உதவித் தொகையை வழங்கி அவர்களின் உயர்கல்வி பணச்செலவுகளை எளிமையாக்க வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. Young Man Murdered: தங்கையை காதலித்து கரம்பிடித்ததால் ஆத்திரம்; 8 மாதம் காத்திருந்து மச்சானின் கதைமுடித்த கொடூரம்..! 

தமிழ் புதல்வன் திட்டம்:

இந்த திட்டத்தின் வாயிலாக உயர்கல்விகளில் பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவிகளைப் போல, மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை 'தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan Scheme 2024)' திட்டத்தின்கீழ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் திட்டம் தொடங்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடந்து வந்தன.

ரூ.401 கோடி ஒதுக்கீடு:

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முதலாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், 3.8 லட்சம் மாணவர்கள் மாதம் ரூபாய் 1000 பெற தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் இந்த திட்டத்திற்கு ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now