சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு; தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சி.. விபரம் இதோ.!
தொழில்முனைவோர், தொழிற்சாலை மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் ரசாயன பொருட்களை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
நவம்பர் 06, தலைமை செயலகம் (Chennai News): தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோக பராமரிப்புக்கு உதவும் ரசாயன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி வழங்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வரும் 13.11.2024 முதல் 15.11.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. Minister Geetha Jeevan: கூக்குரல் இடும் எதிர்க்கட்சிகள்., அரசின் நிலைப்பாடு இதுவே - அமைச்சர் கீதா ஜீவன் ஆதங்கம்.. பரபரப்பு அறிவிப்பு.!
தயாரிப்புகளுக்கு பயிற்சி:
பித்தளை மற்றும் செம்பு க்ளீனர் திரவம், டாய்லெட் & டைல்ஸ் க்ளீனர், கார் வாஷ் ஷாம்பு, சோப்பு இரவம், டிஷ் வாஷ் திரவம், ஃபர்னிச்சர் மற்றும் மர பாலிஷ் இரவம். கப்ளோர் கிளீனர், ஃபேப்ரிக் சாப்ட்னர். கிளாஸ் கிளீனர். ஹேண்ட் வாஷ், ஹெர்பல் ஃபீனைல், ஆயில் கிரீஸ் திரவம் (அனைத்து உலோகங்களும்), ரூம் கப்ரெஷ்னர் திரவம், துரு நீக்கி (அனைத்து உலோகங்கள்), மென்மையான சோப்பு, சானிடைசர், சோப்பு எண்ணெய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ், வாஷிங் பவுடர் ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி போன்ற மேற்கண்ட தயாரிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். Grand Masters Chess Championship 2024: இன்று முதல் தொடங்குகிறது சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்; நேரில் சென்று பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
விண்ணப்பிக்கும் விபரம்:
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள், தயாரிப்புகளை சோதனை செய்வது, அதனை எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சி பற்றிய விவரங்களை அறிய www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 86681 00181 / 98413 36033 என்ற எண்ணுக்கு திங்கள்முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளலாம்.