நவம்பர் 05, கோட்டூர் (Sports News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நவம்பர் 05ம் தேதியான இன்று முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2024 (Chennai Grand Master Chess Championship 2024) போட்டியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நேற்று 04.11.2024 தொடங்கி வைத்தார். இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
செஸ் சம்பியன்களை நேரில் காண அரிய வாய்ப்பு:
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆர். வைஷாலி போன்ற 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடவுள்ளார்கள். AUS Vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
டிக்கெட் முன்பதிவு வழிமுறைகள்:
மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 15 லட்சம், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 6 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும். இப்போட்டியினை நேரடியாக காண குறிப்பிட்ட அளவிலான ஒருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாடமி மாணவ-மாணவியருக்கு இலவசமாக பார்க்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பார்வையிட நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி டிக்கெட்டை https://in.bookmyshow.com/sports/chennai-grand-masters-2024/ET00418069 என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம்.
செஸ் அகாடமிகளுக்கு அனுமதி இலவசம்:
மதியம் 02:30 மணிக்கு மேல் ஆட்டங்கள் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. ஒரு நபர் அதிகபட்சமாக 10 டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். சீசன் பாஸ் டிக்கெட் ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியை தங்களுக்கு விருப்பமான தேதிகளில் இலவசமாக காண செஸ் அகாடமிகள் anshika@mgd.one CC: srinath@mgd.one என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.