Eid e Milad Holiday: தமிழ்நாட்டில் மிலாடி நபி பொதுவிடுமுறை எப்போது?.. விபரம் உள்ளே.!
செப் 4 அன்று தெரியவேண்டிய பிறை சரிவர தெரியாத காரணத்தால், மிலாடி நபி பண்டிகை 17 செப் 2024 அன்று சிறப்பிக்கப்படுகிறது.
செப்டம்பர் 13, சென்னை (Chennai News): இஸ்லாமியர்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் மிலாடி நபி பண்டிகை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 16ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுவதாக இருந்தது. இதனால் அன்றைய நாள் தமிழ்நாட்டில் அரசுப் பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, தமிழ்நாடு தலைமை காஜி, செப்டம்பர் 4ம் தேதி இஸ்லாமிய வழக்கப்படி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாத காரணத்தால், செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபி சிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். Nirmala Sitaraman: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்; ராகுல் காந்தி கடும் கண்டனம்.!
செப் 17 அன்று அரசு விடுமுறை:
இந்த விஷயம் தொடர்பாக மாநில அரசான தமிழ்நாடு அரசிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபி கொண்டாட அனுமதி வழங்கி, அரசுப் பொதுவிடுமுறை தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டது. இதனையடுத்து, செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு அரசின் தலைமை செயலாளர் என். முருகானந்தம் அனுமதி வழங்கி இருக்கிறார்.
மிலாடி நபி பண்டிகை:
இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நினைவில் வைத்து, அதனை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்து, அவரின் வழி நடக்கவும், அவர் கடைபிடித்த ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழவும் மிலாடி நபி பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. இந்த பண்டிகை இஸ்லாமிய மக்கள் தங்களின் இறைத்தூதர் நபிகளுக்கு மரியாதை செய்யும் நாளாகவும் கவனிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மிலாடி நபி பண்டிகை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன், திங்கள் ஒருநாள் இடைவெளிவிட்டு செவ்வாய் வருகிறது. இதனால் சொந்த ஊர் செல்வோர், அங்கிருந்து திரும்ப சென்னை உட்பட பெருங்காரங்களுக்கு திரும்போவர் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.