12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!

7.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tamilnadu Govt Logo | HSC Results Home Page (Photo Credit: Wikipedia / tnresults.nic.in)

மே 06, சென்னை (Chennai): கடந்த மார்ச் மாதம் 01ம் தேதியில் இருந்து தொடங்கி, மார்ச் 26ம் தேதி வரை, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான (12th Exam Results 2024) அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் 8 இலட்சத்திற்கும் (HSC Exam Results TN) அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இவர்கள் அனைவரின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, மே 06ம் தேதியான இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Liquid Nitrogen Foods: வயிற்றில் விழுந்த துளை; இவ்வுளவு பேராபத்து மிக்கதா திரவ நைட்ரஜன்?.. அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ.! 

மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? அதன்படி, 12ம் வகுப்பு பயின்று முடித்துள்ள மாணவர்கள் அனைவரும், தங்களின் தேர்வு மதிப்பெண்களை , dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று சோதித்துக்கொள்ளலாம். மேற்கூறிய இணையங்களுக்கு சென்று, மாணவரின் பிறந்த தேதி மற்றும் தேர்வர் எண் ஆகியவற்றை பதிவிட்டு உள்நுழைந்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் தேர்வு மதிப்பெண் விபரங்கள் பாடவாரியாக தெரிவிக்கப்படும். இதனை நகல் (Print out) எடுத்தும் வைத்துக்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ முறையில் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.