TN Weather Update: "இந்த மழை ட்ரைலர் மட்டுமே.. போட்டுத்தாக்கப்போகும் கனமழை" - தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை.!
இதனிடையே, 5 நாட்களுக்கு தமிழகம் கனமழையை எதிர்கொள்ளவுள்ளது உறுதியாகியுள்ளது.
மே 17, சென்னை (Chennai): தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி (Weather Update) காரணமாக, கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மிதமான மழை (TN Rains) முதல் கனமழை வரை கொட்டித்தீர்த்தது. இன்று வானிலை பல மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியது போல தோன்றினாலும், அடுத்தடுத்து என 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பல மாவட்டங்களில் திடீர் கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டு இருக்கிறது. Monsoon Forecast 2024: முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு..!
மழைக்கான அறிவிப்பு: இந்த விஷயம் தொடர்பாக தனியார் வானிலை மைய ஆய்வாளர் பிரதீப் ஜான் (Tamlnadu Weatherman) பதிவு செய்துள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "நாம் பார்த்தது வேறு டிரைலர் மழை மட்டும் தான். வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாடு கடற்கரைக்கு அருகே நீடிக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழை அதிகம் இருக்கும். இன்னும் அதற்கான சூழல் தொடங்கவில்லை என நினைத்தாலும், தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரிய நாட்கள் வரவுள்ளன. இன்றைய நாளில் சென்னையில் வெயில் காலையை அலங்கரித்தல், அற்புதமான காலநிலை மாறும் என்பதால் இன்றும் ரெயின்கோட்டை எடுத்து செல்லுங்கள்" என கூறியுள்ளார்.