Monsoon Forecast (Photo Credit: Pixabay)

மே 16, புதுடெல்லி (New Delhi): தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை வீச கூடிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஏற்பட கூடிய மழை ஆகும். இந்த மழையில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டாலும் கூட இந்தியாவின் மொத்த விவசாயத்தில் பெரிய பாதிப்பும், இழப்பும் ஏற்படும். கேரளா முதல் வட இந்தியா, மேற்கு தமிழ்நாட்டில் இதுதான் மழையை கொடுக்கும். கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்த நிலையில்தான் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கும் (Monsoon Forecast) என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Unemployment Rate was Declines: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7% குறைவு; ஆய்வில் வெளியான தகவல்.!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு தாமதமாக ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே அதாவது மே 31ஆம் தேதி தொடங்கும். நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழையின் பயணத்தை கண்காணிப்பதில் அதன் தொடங்கும் தேதி முக்கிய பங்கு வகிக்கும். இது வடக்கு நோக்கி நகரும்போது கடுமையான கோடை வெப்பத்திலிருந்து ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.