Jewellery Theft: வீடு புகுந்து நகை திருட்டு – வாலிபர் கைது..!

நகை, பணம் மற்றும் செல்போன் என அனைத்தையும் வீடு புகுந்து திருடிய சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arrest (Photo Credit: Pixabay)

மார்ச் 20, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் புதுத்தெருவில் வசித்து வருபவர் காஜா மைதீன். இவர் சென்ற வாரம் 13-ஆம் தேதி அன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டியில் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளனர். தொழுகை முடிந்தபின் வீட்டிற்கு வந்து இரவு பார்த்தபோது, 10 பவுன் நகை, 2,500 ரூபாய் பணமும் மற்றும் ரு.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது காஜா மைதீனுக்கு தெரிய வந்துள்ளது. Body Fat To Differ Between Men And Women: ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் கொழுப்பு சேர்வது மாறுபடுவதற்கான காரணங்கள் இதோ..!

இதனையடுத்து, புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், திருடியது கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் தெருவைச் சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பவர் ஆவார்.

காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் திருடிய அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.