மார்ச் 20, சென்னை (Health Tips): இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் (Body Fat) என்பது உலகளவில் வளர்ந்து வரும் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண்களை விட பெண்கள் உடல் பருமனால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பலவிதமான கொழுப்பு பரவல் மற்றும் வளர்சிதை மாற்றம் உண்டாவதில் பாலின ஹார்மோன்கள் மிக முக்கியமாக இருக்கின்றன. மேலும், கூடுதலான உணவு பழக்கவழக்கங்கள் இரு பாலினங்களுக்கு இடையேயுள்ள உடல் பருமன் விகிதங்களில் உள்ள வேற்பாட்டிற்கு காரணமாக அமைகிறது. Cargo Ship Sank: தென்கொரியா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – கடலோர காவல்படையினர் மீட்பு பணிகள் தீவிரம்..!
பெண்களில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களின் இனப்பெருக்க தினங்களில் இடுப்புப் பகுதி மற்றும் பிட்டம் பகுதிகளில் கொழுப்பு தங்குவதற்கு வழிவகுக்கிறது. பெண்கள் மெனோபாஸ் அடைந்த பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைந்துவிடுகிறது. இதனால், மீண்டும் கொழுப்பு இடுப்பு, தொடை முதல் அடி வயிறு போன்றவற்றில் சேமிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிப்புக்கான அபாயம் ஏற்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பதால் ஆண்களுக்கு இதயம் சம்மந்தமான நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் ப்ராஸ்டேட், கோலான் போன்ற ஒரு சில வகையான புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் பலவிதமான வளர்சிதை மாற்ற கோளாறு பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் உடல் பருமன் சார்ந்த பிரச்சனைகள் சரிசமமாகவே இருக்கிறது. மேலும், இதனை கட்டுக்குள் கொண்டு வர தினமும் சரிவிகித உணவை உட்கொண்டு, உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து உடல் எடையை சரியாக பாதுகாத்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.