Puliyarai Lorry Crash: இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகிய லாரி; டார்ச் லைட் அடித்து இரயில் நிறுத்தப்பட்டதால் கோர விபத்து தவிர்ப்பு.. உடல் சிதறி நடந்த சோகம்.!
பாரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகவே, விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் சிதறி பலியாகினர். இரயில் வழித்தடத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், உள்ளூர் மக்களின் சாமர்த்தியத்தால் இரயில் மோதி ஏற்படும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பிப்ரவரி 25, புளியரை (Tenaksi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியரை வழியாக தமிழ்நாடு - கேரளா மாநிலம் இணைக்கப்படுகிறது. இரயில் மற்றும் சாலை வழிபோக்குவரத்து பயணங்கள் இவ்வழித்தடத்தில் பிரதானம் என்றும் கூறலாம். புளியரை எல்லை வழியாக தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இருமாநில எல்லைகளையும் கடந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது.
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து (Lorry Crash in Railway Track) விபத்து: லாரியை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் இயக்கியுள்ளார். அவருடன் உதவியாளராக பெருமாள் என்பவர் இருந்துள்ளார். இவர்களின் வாகனம் இன்று அதிகாலை 12:35 மணியளவில் புளியரை எஸ்.வளைவு பகுதியில் வந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த லாரி, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து எஸ்.வளைவு இரயில் தண்டவாளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
டார்ச் லைட் கொண்டு நிறுத்தப்பட இரயில்: அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் வயோதிக தம்பதி சண்முகம், வடக்கத்தி அம்மாள் மற்றும் தோட்டத்தின் காவலாளி சுப்பிரமணி ஆகியோர் விபத்து சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அச்சமயம், செங்கோட்டையில் இருந்து கேரளா நோக்கி பயணிக்கும் இரயில் வரும் சத்தம் கேட்கவே, அதிர்ந்துபோன அவர்கள் டார்ச் லைட் எடுத்துச்சென்று விரைந்து இரயிலை நடுவழியில் நிறுத்தினர். US Sanction Over Russia: அலெக்சி நாவல்னி மரணம்; ரஷியாவின் மீது கூடுதலாக 500 பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!
நடுவழியில் நிறுத்தப்பட்ட இரயில்: பின் விபத்து குறித்து காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விசாரணையில், கேரளா மாநிலத்தில் உள்ள புனலூரில் இருந்து திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலுக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவிருந்தது. இந்த இரயில் செங்கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் இரயில் புனலூருக்கு கிளம்பி இருக்கிறது.
அதிவிரைவு இரயில் செங்கோட்டையில் நிறுத்தம்: இரயில் காலி பெட்டிகளாக இருப்பினும், வயோதிக தம்பதி மற்றும் தோட்ட காவலாளி நள்ளிரவு நேரத்தில் எழுந்து இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கோட்டை - கொல்லம் இரயில் வழித்தட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகளும் அவதியடைந்துள்ளனர்.
3 துண்டாக ஓட்டுனரின் உடல் மீட்பு: சென்னையில் இருந்து கொல்லம் வரும் அதிவிரைவு இரயிலும் செங்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனலூர் செல்லவேண்டிய இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து உடல்கள் 3 துண்டாக சிதறிய நிலையில் ஓட்டுனரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)