Tasmac in Tamilnadu: "டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க முதல்வருக்கு விருப்பம் இல்லை" - அமைச்சர் முத்துசாமி பரபரப்பு பேட்டி.!

படிப்படியாக மதுவிலக்கு என்பது தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும், ஒரே நாளில் அவசர கதியில் அதனை கொண்டு வரமுடியாது எனினும், முதல்வர் ஆணையிட்டால் அது செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Minister Muthusamy (Photo Credit: @PolimerNews X)

செப்டம்பர் 12, ஈரோடு (Erode News): காந்தி ஜெயந்தி நாளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கை உடனடியாக மூடக்கூறி, விடுதலை சிறுத்தைகள் (VCK Party) கட்சியின் மகளிரணி (VCK Campaign) சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து மாநாடு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் (Thol Thirumavalavan), அதிமுக (AIADMK) உட்பட எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும், மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடையோர் யாராக இருந்தாலும், விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என தெரிவித்தார். Caterpillar: ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் மு.க ஸ்டாலின்.. அமெரிக்க பயணத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகள்.! 

விசிக-திமுக உரசலை கிளப்பும் அரசியல்புயல்:

திமுக (DMK Alliance) கூட்டணியில் இருந்து வரும் விசிக, தமிழ்நாடு அரசை தனது அதிகாரத்தில் வைத்துள்ள திமுக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என மாநாடு நடத்துவது தமிழக அரசியல்களத்தில் விவாதத்தை கிளப்பி இருந்த அதே வேளையில், அதிமுகவினரும் பங்கேற்க்கலாம் என திருமாவளவன் அறிவித்ததும், அதிமுகவுடன் அவர் இணக்கமான சூழலை எதிர்பார்க்கிறார் என விமர்சனங்கள் தொடங்கியது. விசிக மாநாட்டில் பங்கேற்பதாக தற்போது வரை பிற எந்த கட்சிகளும் உறுதியான தகவலை தெரிவிக்கவில்லை. தங்களது கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

படிப்படியாகவே மதுவிலக்கு (Prohibition of Alcohol):

இந்நிலையில், விசிகவின் மதுஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து தமிழ்நாடு மது ஒழிப்புத்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், "பூரண மதுவிலக்கு என ஒரேநாளில் உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், அதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். அதனை கட்டுப்படுத்த இயலாது. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், மதுக்கடைகளை திறந்து வைப்பதில் எள்ளளவும் விருப்பம் என்பது இல்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். உடனடியாக மது ஒழிப்பு குறித்து முடிவெடுத்தால் ஏற்படும் விபரீதத்தை தடுக்கவே, படிப்படியாக மதுவிலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு விசிக பொதுவான அழைப்பு மட்டுமே விடுத்தது. அனைத்து கட்சியும் வாருங்கள் கூறியதற்கு, அதிமுக ஆட்டம் போடுவது ஏனோ?" என கூறினார்.