The GOAT & Vettaiyan: பள்ளியில் திரையிடப்பட்ட தி கோட், வேட்டையன் படங்கள்; நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.!

அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், தி கோட் மற்றும் வேட்டையன் படங்கள் திரையிடப்பட்டது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

The GOAT | Vettaiyan Movie Posters (Photo Credit: @Chrissuccess / @TheDigiStar X)

நவம்பர் 12, விகே புரம் (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.கே புரம், இருதயகுளம் (Irudhayakulam School) பகுதியில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருபாலரும், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெண்கள் மட்டும் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் பள்ளியில் பிரம்மாண்ட அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு திரைப்படம் திரையிடப்பட்டதாக தகவல் வெளியானது.

பள்ளியில் தி கோட், வேட்டையன் (The GOAT Flim Screened in School) படங்கள்:

அதாவது, இளையதளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1700 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வரும் பள்ளியில், 1200 மாணவ-மாணவிகள் திரைப்படங்களை கண்டுகளித்ததாக சொல்லப்படுகிறது. Tamilnadu Shocker: 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்; விடுதி அறையில் கொடுமை., அடுத்தடுத்து நெஞ்சுவலி நாடகம்?

முதன்மை கல்வி அலுவலர் விசாரணை:

இதற்காக வேட்டையன் படத்திற்கு தலா ரூ.10 கட்டணமாகவும், தி கோட் படத்திற்கு தலா ரூ.15 கட்டணமாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் தரப்பில், மாணவ - மாணவிகளின் மனஅழுத்தம் குறையவே பள்ளியில் படம் திரையிடப்பட்டது என விளக்கம் அளித்ததாக தகவல் தெரியவருகிறது. இதனால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.