Schoolboy Suicide: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை – விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!
பொது தேர்வு நெருங்கி வரும் நிலையில், செல்போன் பார்ப்பதை தவிர்க்க சொல்லி தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
மார்ச் 16, புளியம்பட்டி (Erode News): ஈரோடு மாவட்டத்தில் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி தெருவைச் சேர்ந்த லோகநாதன்-பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகன் உள்ளார். இவர் நல்லூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்கிடையில் ரகு செல்போன் பார்த்துக்கொண்டிருக்கையில், அவரின் தந்தை அவனிடம் பொது தேர்வு நடைபெற இருப்பதால் செல்போன் பார்ப்பதை நிறுத்திவிட்டு படிக்க சொல்லி இருக்கிறார். Junk Foods: குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கத்தைவிட இதோ அதற்கான வழிமுறைகள்..!
இதனால் ரகு மன உளைச்சல் ஏற்பட்டு, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரகுவின் பெற்றோர் அழுது கதறினர். உடனே அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்துவிட்டு, இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தை கண்டித்ததால், மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.