South Korea Bans Phones (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28, சியோல் (World News): இன்றைய நவீன உலகில் இளைஞர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டின் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளி வகுப்பறைகளில் மொபைல் போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் மசோதாவை தென் கொரியா அரசு நிறைவேற்றியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் (Bans Mobile Phones) அதிகமாகப் பயன்படுத்துவது மாணவர்களின் கவனத்தைக் குறைப்பதன் மூலம் எதிர்மறையாக பாதிக்கிறது. தூக்கமின்மை, போதை பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மன பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. 22 வயதில் உயிரிழந்த வழக்கறிஞர் பெண்.. சிடி ஸ்கேன் எடுக்கும்போது விபரீதம்..!

செல்போன் பயன்படுத்த தடை:

இதனால், தென் கொரியாவில் மாணவர்களின் வாழ்க்கை பாதிப்படைவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் உட்பட 163 சட்டமன்ற உறுப்பினர்களில் 115 பேர் ஒப்புதல் அளித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், தென் கொரியாவில் மார்ச் 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.