ஜூலை 13, சென்னை (Health Tips Tamil): உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவுகள் வாயிலாக நாம் எடுத்துக் கொள்கிறோம். உணவே மருந்து என்ற நிலை மாறி, மருந்து இந்நாட்களில் மிகப்பெரிய இடத்தினை தக்க வைத்துள்ளது. தற்போது உள்ள பலரும் சாப்பிடும்போது டிவி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பார்த்துக்கொண்டு சாப்பிடும் பழக்கத்தையும் கையில் எடுத்துள்ளனர். இந்த பழக்கம் அன்றாட பழக்கமாக மாறினால் உடல் நலக்கோளாறுகளுக்கு வழிவகை செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Meen Kuzhambu: கிராமத்து ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?.!
சாப்பிடும்போது செல்போன் பார்ப்பதால் உண்டாகும் விளைவுகள் :
குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிவி, ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டு சாப்பிடும் காரணத்தால் உடல்பருமன் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும, பல உடல்நல பிரச்சனைகளுக்கு இது மூல காரணமாக அமையும் என்றும் எச்சரிக்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை செல்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடும் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் கண் பலவீனம், உடற்பருமன், வயிறு சார்ந்த பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள், மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்றவையும் ஏற்படும்.
மருத்துவர்கள் எச்சரிக்கை :
ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதால் உணவை நன்கு மென்று விழுங்காமல் செரிமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் தூக்கமும் கேள்விக்குறியாகிறது. வழக்கத்தை விட அதிகமாக உண்ணுவதால் மூச்சு விடுவதில் சிரமம், ஜீரணக் கோளாறு போன்றவையும் ஏற்படுகிறது. குழந்தைகளின் இளம் பருவத்தில் இவ்வாறான பிரச்சனையை கண்டறிந்து சரி செய்யாத பட்சத்தில் மிகப்பெரிய விளைவுகளுக்கும் ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.