Xiaomi Mobile Battery Replacement Offer (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 27, சென்னை (Technology News): இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையை கையகப்படுத்தியுள்ள ரெட்மி நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ரெட்மி ஸ்மார்ட் போனை தயாரித்து வரும் சியோமி நிறுவனம் (Xiaomi) இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய படைப்புகளால் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பும் ஒரு ஸ்மார்ட்போனாகவும் ரெட்மி இடம் பெற்றுள்ளது. Google Pixel 10 Series: கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம்.. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..! 

50% தள்ளுபடியில் பேட்டரி மாற்றம் :

இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 50% தள்ளுபடியில் பேட்டரி மாற்றி தரப்படும் (Battery Replacement) என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு, இணைய சேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறப்பு சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.