Elephant Tusks Smuggling: யானை தந்தம் கடத்தல் விவகாரம்; வாகன சோதனையில் மடக்கி பிடித்த வனத்துறையினர் - மேலும் 2 பேருக்கு தொடர்பு..!

Wild Elephant (Photo Credit: pixabay)

ஏப்ரல் 10, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் யானை தந்தங்கள் (Elephant Tusks) விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் ஒன்று வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன பரிசோதனையில், மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். Budget Smart Phones Under Rs.25,000: பட்ஜெட் ரூ. 25.000-குள் உள்ள ஸ்மார்ட் போன்கள் – விவரம் உள்ளே..!

சோதனை மேற்கொண்டதில், ஒரு வாகனத்தில் 2.3 கிலோ எடையுள்ள யானை தந்தங்களை, வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில், தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32) மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (வயது 42) ஆகியோரை கைது செய்து, நாகர்கோவில் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இருவரும் முரணான பதில் அளித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து விசாரித்ததில், நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் தான் யானை தந்தத்தை தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு விற்க அனுப்பி உள்ளார் எனவும், இதில் இருவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட இருவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர், அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.