Ponmagan Scheme: பெண்களுக்கு மட்டும்மில்லை.. ஆண்களுக்கும் இருக்கு சேமிப்புத் திட்டம்.. பொன்மகன் சேமிப்புத் திட்டம்..!

ஆண் குழந்தைகளுக்காக தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்.

Saving Schemes (Photo Credit: Pixabay)

மார்ச் 13, சென்னை (Chennai): பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் (Ponmagan Podhuvaippu Nidhi Scheme), ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகிறது.

முதலீடு செய்யும் முறை: உங்களின் 10 வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் பொது வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம், ஓர் நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 வரை தவணை செலுத்தலாம். ஒரே முறை முதலீடாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இதில் சேமிக்க இயலும். Space One Rocket Explodes: கிளம்பிய வேகத்தில் வெடித்துசிதறிய ஸ்பேஸ் ஒன் ராக்கெட்; வைரல் காட்சிகள் இதோ.!

குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு (joint account) தொடங்க வேண்டும். அதாவது பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.

வட்டி: இந்தத் திட்டத்தில் தற்போதைக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. ஆயினும் இது, ஒவ்வொரு நிதிக் காலாண்டு அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ (Post Office Saving Schemes (indiapost.gov.in) தெரிந்துகொள்ளலாம்.