Dr Subbiah Murder Case: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. 7 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

தமிழ்நாட்டை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 7 குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது

Judgement (Photo Credit: Pixabay).jpg

ஜூன் 14, சென்னை (Chennai News): சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கானது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலப் பிரச்சனை: கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுப்பையா. இவரது தாய்மாமா பெருமாள் தம்முடைய சொத்துகளை டாக்டர் சுப்பையாவின் அம்மா அன்னக்கிளிக்கு எழுதி வைத்தார். இதற்கு பெருமாளின் 2-வது மனைவி அன்னபழம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அன்னபழத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இத்தீர்ப்புக்கு எதிராக டாக்டர் சுப்பையாவின் தாயார் மேல்முறையீடு செய்தார். அப்போது இருதரப்பும் சமாதானமாகி டாக்டர் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளிக்கு 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. World Blood Donor Day 2024: "இரத்த தானம் செய்யுங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" உலக இரத்த தான தினம்..!

சில வருடங்களுக்கு பின்னர் அன்னபழத்தின் மகன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியரான பொன்னுசாமி, அன்னக்கிளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து டாக்டர் சுப்பையா 2.5 ஏக்கர் நிலத்தை மனைவிக்கு எழுதி வைத்தார். இந்த நிலத்துக்கு எவர் ஒருவரும் உரிமை கோராமல் இருக்க நீதிமன்றத்தில் தடையும் வாங்கினார். அத்துடன் பொன்னுசாமி மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இந்த நிலப் பிரச்னை தொடர்பாக, சுப்பையா 2013 செப்டம்பர் மாதம் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

7 பேருக்கு தூக்கு தண்டனை: இவ்வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 7 பேரும் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி: தற்போது மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ளது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.