Blood Donor (Photo Credit: Pixabay)

ஜூன் 14, புதுடெல்லி (New Delhi): உலக ரத்ததான தினம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இரத்தம் மற்றும் பிளாஸ்மா தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்காகவும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க ரத்தம் மற்றும் பிளாஸ்மா எப்போதும் கிடைக்க வழிவகை செய்யவும் இந்த நாளானது கொண்டாடப்படுகிறது.

வரலாறு: உலக ரத்த தான தினமானது முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த நாளை ஜூன் 14ஆம் தேதி கொண்டாடுவதற்கு காரணம், பிறந்த ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் ஆவார். இவன் நவீன இரத்த மாற்று நடைமுறையில் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் ரத்த வகை பிரிவுகளை உருவாக்கியவர். அதற்காக இவருக்கு 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!

ரத்த தானம் செய்யும்பொழுது கவனிக்க வேண்டியவை: ரத்த தானம் செய்வதற்கு நீங்கள் 18 முதல் 65 வயது உடையவராக இருக்க வேண்டும். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம். சில நாடுகளில் 16 17 வயதுடையவர்கள் கூட ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேநேரம் ரத்த தானம் செய்ய உங்கள் எடை 45 கிலோவிற்கு குறைவாக இருக்கக் கூடாது. அதேபோல உங்கள் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடாது. எச்ஐவி தொற்று உள்ளவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது.

மூன்று மாதத்திற்கு முன் மலேரியா சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது. ரத்த தானம் செய்த பிறகு உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். எனவே ரத்த தானம் செய்வதற்கு முன் விரதம் இருக்கக் கூடாது. ரத்த தானம் செய்வதற்கு முன் அதிகமாக நீர் அருந்த வேண்டும். அதிகமான பழங்கள் சாப்பிடுவதன் மூலம் சோர்வில் இருந்து விடுபடலாம்.