Old Woman Murder: உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டி படுகொலை; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

விருதுநகரில் வீட்டில் இருந்த மூதாட்டியை மர்ம நபர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder (Photo Credit: Pixabay)

ஜூன் 12, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், ராமமூர்த்தி சாலை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வேலம்மாள் (வயது 74) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் குருசாமி இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். Minor Boy Sexual Harassment: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இளம்பெண் போக்சோவில் கைது..!

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் மகள் சாப்பாடு கொடுத்துவிட்டு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு, மாலை 6 மணிக்கு மேல் தாயை பார்க்க மகள் வந்துள்ளார். அப்போது, வேலம்மாள் உடல் முழுவதும் பேனாவால் குத்திக் கொலை (Stabbing Death) செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கழுத்தில் பேனா குத்திய நிலையில் இருந்துள்ளது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, தகவலறிந்து வந்த விருதுநகர் கிழக்கு காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, மேற்கொண்ட விசாரணையில் கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement