Minor Boy Sad | Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 12, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள போடி அடுத்த தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் (Child Care) உள்ளது. இங்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த காப்பகத்தின் நிர்வாகியாக போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவரது மனைவி முனீஸ்வரி (வயது 28) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 10 வயது சிறுவன் இங்கு தங்கி அருகிலுள்ள சில்லமரத்துப்பட்டியில் அமைந்துள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. Onion Price Hike: இனி வெங்காயம் இல்லாமல் சமைக்க வேண்டியது தான்.. வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு..!

இதனையடுத்து, அங்கு பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அந்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். அப்போது, காப்பகத்தின் நிர்வாகியான முனீஸ்வரி எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், காப்பகத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.