A Man Money Fraud Case Arrested: பண மோசடியில் ஈடுபட்டவர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
திருவள்ளூரில் ரூ.1.18 கோடி பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து, அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மே 07, ஆவடி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, ஆனந்தா நகர் பகுதியில் உள்ள சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் காலித் முகமது (வயது 43). இவர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார் ஒன்றில் கூறுகையில், "கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த பாண்டியராஜ் (வயது 43) என்பவரும், நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தோம். 12th Student Suicide: பிளஸ்-2 தேர்வு முடிவுகள்; இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் பலி..!
இதன் மூலம் கிடைக்கும் வருவாயை நாங்கள் இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டோம். முதலில் இலாப பணத்தை சரியாக கொடுத்து வந்த பாண்டியராஜ், பிறகு தொழில் செய்வதற்காக என்னிடம் வாங்கிய பணம் மற்றும் என்னுடைய இலாப பணம் 30 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றினார். மேலும், அவர் கொடுத்த காசோலையிலும் பணம் இல்லாமல் போனது. மேற்கொண்டு, என்னுடைய ‘மாருதி 20 ஸ்போர்ட்ஸ்’ (Maruti 20 Sports) காரை ரூ.17,000 வாடகை தருகிறேன் எனக்கூறி எடுத்துச் சென்றார். ஆனால், அவர் எனக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பாண்டிராஜ் பற்றி மேற்கொண்ட விசாரணையில், என்னை போலவே, மேலும் நான்கு பேரிடம் 2 கார் மற்றும் ரூ.88 லட்சம் என மொத்தம் ரூ.1.18 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதனால், அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு சொந்தமான காரையும், பணத்தையும் மீட்டு தர வேண்டும்" என அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரி பரணி, நேற்றைய தினம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கீழ் திருப்பதியில் தலைமறைவாக இருந்த பாண்டியராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.