Ganja Sellers Arrested: 7 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 4 பேர் கைது..!

தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Cannabis | Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 06, கம்பம் (Theni News): தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கூடலூர் 18-ஆம் கால்வாய் கரை பகுதியில் சிலர் கஞ்சாவை (Ganja) பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின் அடிப்படையில், கூடலூர் மேற்கு காவல்நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 18-ஆம் கால்வாய் கரை மூன்றாவது பாலம் அருகே ஒரு பெண் உட்பட 4 பேர் சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்தனர். Couple Dies By Suicide: கடன் வாங்கி மனைவியை பாதுகாத்த கணவர்; கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால், தம்பதி ஜோடியாக தற்கொலை..!

இந்நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அதில், அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த மாயி (வயது 46) மற்றும் சின்னசாமி (வயது 62), கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 22), கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த அமுதா (வயது 48) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.