TN Police Officials Transferred: தமிழக காவல்துறை அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 56 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN Police (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai): சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்துள்ள உத்தரவின் படி, தமிழக காவல்துறையில் (TN Police Officials) பணியாற்றும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி, தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், கரூர், சேலம் நாகை, திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி,வேலூர் ஆகிய மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம் (Transferred) செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம்: சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை காவல் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி-யான சுஜித் குமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி-யான எஸ். செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையராகவும், ஆவின் விஜிலென்ஸ் எஸ்பி மேகலினா ஐடென் சென்னை தலைமையிட துணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, அதே பிரிவில் உள்ள மத்திய குற்றப்பிரவு (2) துணை ஆணையராகவும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் டி.ரமேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். TN Govt Bus: வார இறுதியில் சொந்த ஊர் போறிங்களா?.. அசத்தல் குட் நியூஸ் இதுதான்..! விபரம் இதோ.!

புதிய எஸ்.பிக்கள் நியமனம்: கோவை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, சேலம், கருர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை எஸ்.பி.ஆக கார்த்திகேயன், பெரம்பலூர் எஸ்.பி-ஆக ஆதர்ஷ் பச்சேரே, கரூர் எஸ்பியாக பெரோஸ் கா, சேலம் எஸ்.பி-ஆக கௌதம் கோயல், நீலகிரி மாவட்ட எஸ்.பி-ஆக நிஷா, தர்மபுரி மாவட்ட எஸ்.பி-ஆக மகேஸ்வரன், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி-ஆக பிரபாகர், சென்னை மயிலாப்பூர் துணை காவல் ஆணையராக ஹரி கிரண் பிரசாத், வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆக மதிவாணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.