Madurai Chithirai Festival 2024: கோலாகலமாக நடக்கும் மதுரை சித்திரைத் திருவிழா.. இன்று தேரோட்டம்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 22, மதுரை (Madurai): மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சித்திரைத் திருவிழா (Chithirai Festival) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம் நிகழ்ச்சிகள், மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் என கோலாகலமாக சித்திரை திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து இன்றைய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக பல லட்சம் பக்தர்கள் கூடியுள்ளனர், தற்போது மதுரையே திருவிழா கோலம் பூண்டுள்ளது. Brutal Murder of 8 Aged Minor Girl: மகளின் மீது கணவர் வைத்த பாசத்தால் தாய் வெறிச்செயல்: 8 வயது சிறுமி கொடூர கொலை.. ஈரக்கொலையை நடுநடுங்கவைக்கும் துயரம்.!
தேரோட்டம் காரணமாக நான்கு மாசி வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் அவசரகால ஊர்திகளும் என அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.