Lightning Attack Death: மழை நேரத்திலும் விடாத விவசாய பணி; 58 வயது பெண்மணி மின்னல் தாக்கி பரிதாப பலி.!

இவ்வாறான தருணங்களில் மின்னல் தாக்குதலுக்கான ஆபத்து அதிகம் உள்ளது.

Lightning | Farm Field File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 10, கவரைப்பேட்டை (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை, அமிதாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரத்தினம். இவரின் மனைவி செல்லம்மாள் (வயது 58). விவசாய கூலித்தொழிலாளி ஆவார்.

அப்பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரின் வயலில் களையெடுக்கும் பணியில் சம்பவத்தன்று செல்லம்மாள் ஈடுபட்டு இருந்தார். செல்லம்மாள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 8 பெண்கள், வயல்வெளியில் நேற்று களைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று மாவட்டத்தில் நல்ல மழைபெய்து வந்த நிலையில், நேற்று மதியம் திடீரென இடி-மின்னலுடன் கனமழை பெய்யத்தொடங்கியது. கொட்டும் மழையையும் கண்டுகொள்ளாத விவசாய பணியாளர்கள், தங்களின் வேலைகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மின்னல் செல்லம்மாளை தாக்கியது. இந்த சம்பவத்தில் செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். Mumbai Sea Link Accident: மும்பை பாந்த்ரா - வோர்லியை இணைக்கும் சுங்கச்சாவடியில் பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி.! 

அவருடன் வயலில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த வனஜா, தமிழரசி, சகிலா, நாகேஸ்வரி, பொம்மி, கஸ்தூரி உட்பட 8 பேர் படுகாயமடைந்து அலறி துடித்துள்ளனர்.

வயலில் மின்னல் விழுந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள், விரைந்து வந்து அனைவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

செல்லம்மாளின் உடல் காவல் துறையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை பெய்யும் நேரங்களில் விவசாய நிலங்களை மின்னல்கள் தடுக்கும் அபாயம் அதிகளவு இருக்கிறது என்பதால், விவசாய தொழிலாளர்கள் மழை நேரங்களில் பாதுகாப்பாக வேலைகளை தவிர்த்துவிட்டு வருவது நல்லது. அதேபோல, மரத்திற்கு கீழேயும் ஒதுங்க கூடாது.